Categories
தேசிய செய்திகள்

ஜாமீனில் வந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதி ஒருவர் ஜாமீனில் வெளியே வந்து,அதே சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நபர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |