Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த பெண்… எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

கணவனை கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள புள்ளக்கவுண்டன்பட்டியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வைஷ்ணவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் கடந்த ஏப்ரல் மதம் ஜெய்சந்திரனுடன் இணைந்து வைஷ்ணவி அருண்குமாரை கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரன் மற்றும் வைஷ்ணவியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வைஷ்ணவி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து போடியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் யாரும் தன்னுடன் பேசாததால் மனமுடைந்த வைஷ்ணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த கோடி டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |