ஜாமீனில் வெளிவந்த நபர்களை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தவரை கால்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வடமதுரை காவல் துறையினர் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தங்கமுத்து, நந்தகுமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் தங்கமுத்து மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக சந்தோஷ்குமார் தரப்பைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஊர் மத்தியில் உள்ள கோவிலின் முன்பாக பட்டாசு வெடித்துள்ளார். இதனை பார்த்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசு வெடிப்பதாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வடமதுரை காவல்துறையினர் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.