கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் உள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் ஜாமீன் கோரி தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் மாணவியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம், என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,அவர்களுக்கு ஜாமீன் எப்போதும் கொடுக்கவே கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.