Categories
உலக செய்திகள்

“ஜாம்பிகள்” நிறைந்த மர்ம ரெஸ்டாரண்ட்….!! பீதியை கிளப்பும் திகில் அனுபவம்….!!

சவூதி அரேபியாவின் தலைநகரில் பயமூட்டும் வகையில் ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத்தில் மக்களுக்கு பயமூட்டும் வகையில் புதிய தோற்றத்தில் ‘ஷேடோஸ்’  ரெஸ்டாரன்ட் ஒன்று அமைக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இதில் உணவு அருந்துவதற்காக போடப்பட்டிருக்கும் டேபிள்களில் ஜாம்பிகள், மனித எலும்புக்கூடுகள், ரத்த காட்டேரிகள் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஊழியர்கள் பயமுறுத்தும் கோரமான உடைகளை அணிந்திருக்கிறார்கள். அங்கு சென்றவர்களுக்கு பயம் நிறைந்த அனுபவத்தை சற்றும் குறைவின்றி கொடுப்பதற்காக ஜாம்பி போன்று உடை அணிந்து நடித்து வருகிறார்கள்.

இந்த ரெஸ்டாரண்டுக்கு சென்றிருந்த ஒருவர் கூறுகையில் “அங்கு வேடிக்கையான அனுபவத்தை எதிர்பார்த்து சென்றிருந்தேன். ஆனால் ஷேடோஸ் ரெஸ்டாரண்ட் மிகவும் பயம் நிறைந்து திகில் தோற்றத்துடன் அமைந்துள்ளது” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |