ஜார்கண்டில் தன்பாத் ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரயில் நிலையத்தில் நிலகரி ஏற்றப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 6:24 மணியளவில் திடீரென சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது இந்த விபத்தில் ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டியதும் சரக்கு ரயில் அடுத்து இருந்த தண்டவாளம் வரை புரண்டு கிடந்தது.
இதனால் அந்த வழியே செல்லக்கூடிய மற்றும் அந்த வழியில் வரும் ரயில் பயணிகள் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மதிய கிழக்கு ரயில்வே கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விபத்து நடைபெற்ற பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். நிலைமை சரி செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள் மேலும் அந்த பகுதியில் ரயில் சேவை மீண்டும் இயக்குவதற்கு பல மணி நேரமாகும் என கூறப்படுகிறது.