நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில்கொரோனா ஊரடங்கு ஜூன் 16-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் புதிய நெறிமுறைகள் உடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஐந்தாவது முறையாக மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 23 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள மாவட்டத்தில் பகல் 2 மணிவரை கடைகள் திறக்க அனுமதி. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.