Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் கைது….!! சதித்திட்டம் தீட்டப்பட்டதா…??

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில்  உள்ள குந்தி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 14 வயது சிறுவன் உட்பட 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராணியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்ரோடி கிராமத்தில் வைத்து இந்த நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில்  விஸ்ராம் கொங்காடி மற்றும் குலென் கொங்காடி இருவரும் பல்வேறு வழக்குகளில்  போலீசாரால் தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து தோட்டாக்கள்,துப்பாக்கிகள், மற்றும் வெடிகுண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |