நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
Here is the Exclusive Video of #ThalapathyVijay at Georgia & Chennai Airport. @actorvijay #Thalapathy65 pic.twitter.com/V5pphIeMkW
— Beast Fan Page (@BeastTamilMovie) April 25, 2021
இந்நிலையில் நடிகர் விஜய் ஜார்ஜியா படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘தளபதி 65’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதா? அல்லது தமிழகத்தில் படமாக்கப்பட உள்ளதா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.