அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து மினியபொலிஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவரை சாலையில் பலரும் பார்க்கும் வண்ணம் வெள்ளையின காவலர் டெரக் சாவின் படுகொலை செய்துள்ளார். காவல்துறை அதிகாரியான டெரக் சாவின் அவரது காலை ஜார்ஜ் ஃப்ளாய்டுவின் கழுத்தில் வைத்து அழுத்தியவாறு சரியாக 9 நிமிடம் இருந்துள்ளார். இந்நிலையில் என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஜார்ஜ் திணறிக் கொண்டு பேசிய வீடியோ காட்சி நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இது இன வெறி கொலை என்பது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெள்ளையின காவல்துறை அதிகாரி டெரக் சாவின் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு மினியபொலிஸ் நீதிமன்றத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜார்ஜ்யின் இளைய சகோதரர் ஃபிளோனிஸ் ஃப்ளாய்ட் இப்போது தான் நாங்கள் நிம்மதியாக சுவாசிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றி நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி கூறியுள்ளார். இத்தகைய தீர்ப்பு கறுப்பினமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.