கருப்பினத்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்குவதாக நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு போலீஸ் விசாரணையின் போது கறுப்பினமனிதர் ஜார்ஜ் பிளாய்டு (46 வயது) என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், உலகத்தில் கருப்பு இனத்தவரின் உயிரும் உயர்ந்ததுதான் என்று கூறியும் பல்லவேறு மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் குடும்பம் நகர நிர்வாக காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடந்தனர். இந்த வழக்கு தற்போது இருதரப்பு ஒப்புதலுடன் முடித்து வைக்கப்பட்டு, ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்திற்க்கு ரூ. 1,96,26,09,750 தொகையை இழப்பீடாக வழங்குவதாக மினியா காவல் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.