Categories
உலக செய்திகள்

“ஜாலியாக படம் பாருங்கள் ட்ரம்ப்” கலாய்த்த தன்பெர்க்…. வைரலாகும் கர்மா ஒரு பூமராங்…!!

ட்ரம்பின் டுவீட்க்கு கலாய்த்து பதில் அனுப்பிய பூமராங் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் அதிக பதற்றத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தான் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாமே தோல்வியில் முடிந்துள்ளன. ஆனாலும் டிரம்ப் தான் தோல்வியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில்  ஒருவேளை ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் ஆட்சி மாற்றத்திற்கு டிரம்ப் ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இதையடுத்து நேற்று டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “STOP THE COUNT ” என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள சூழியல் செயற்பாட்டாளரான க்ரேட்டா தன்பர்க், டிரம்பை கேலி செய்து பதில் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த வருடம்  இதே சமயம் டிரம்ப் தன்னை கலாய்த்ததற்காக  பதிலடி கொடுத்துள்ளார். அதில் “டிரம்ப் அவர்களே நீங்கள் உங்களுடைய கோபத்தை குறைத்துக் கொண்டு உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஒரு படத்தை பாருங்கள்” என்று கூறியிருந்தார். இதை தற்போது நெட்டிசன்கள் கர்மா ஒரு பூமராங் என்று இணையதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

Categories

Tech |