கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தேவு என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனையடுத்து தன்னுடைய கணவர் வெளிநாட்டு வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய தாயோடு பாலக்காட்டில் வசித்து வருவதாகவும் அந்த நபரிடம் தேவ்வு கூறியுள்ளார். மேலும் நான் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். என் வீட்டுக்கு வாருங்கள். ஜாலியாக இருப்போம் என்றும் அந்த தொழில் அதிபருக்கு தேர்வு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை கண்டு மகிழ்ச்சியடைந்த அவர் காரை எடுத்துக் கொண்டு தேவு சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் அந்த தொழிலதிபர் தேவுவின் வீட்டிற்கு சென்றவுடன் சிறிது நேரம் கழித்து திடீரென்று அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தொழிலதிபரை வீடியோ எடுத்து மிரட்டி அவரிடம் இருந்து தங்கச் செயின், கார், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆளை விட்டா போதும் என்று எண்ணி அந்த தொழிலதிபர் அங்கிருந்து ஓட்டம் எடுத்து தப்பிள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். உடனே நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் தேவ்வு அவருடைய கணவர் கோகுல் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில் தேவு பேசுவது போல அவருடைய கணவர் தான் தொழிலதிபருக்கு மெசேஜ்ஜில் கடலை போட்டு வந்தது நேரம் பார்த்து அவரை வரவழைத்து பண முயற்சி ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் தேவுவும், அவருடைய கணவரும் இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது