Pradhan Mantri Vaya Vandana Yojana என்ற திட்டத்தில் மாதந்தோறும் ருபாய் 10 ஆயிரம் வரையிலும் பென்சன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இளம் வயதில் நீங்கள்சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களின் கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இன்றி சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு கைவசம் பணம் இருக்க வேண்டும். அதற்காக இன்றைய தினம் முதல் நீங்கள் சேமிக்கத் துவங்க வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என நினைக்காமல், இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள ஏதேனும் ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். இதற்கு பென்சன் திட்டமானது உதவியாக இருக்கும்.
இந்த திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வுக்காலத்தில் முதியவர்களுக்கு இந்த திட்டமானது உறுதியான பென்சன் வழங்குகிறது. முதியோர் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் 2023 மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை சேமித்து கொள்ளலாம். அதிகபட்சம் 10 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். 10 ஆண்டு பாலிசி காலத்துக்குப் பின்பும் முதலீட்டாளர் உயிரோடு இருந்தால், கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கும்.
அதே சமயம் பாலிசி காலத்திலேயே பாலிசிதாரர் இறந்து விட்டால், அவரது நாமினிக்கு முழு முதலீட்டுத் தொகையும் கிடைக்கும். மூன்று வருடங்கள் முடிந்த பிறகு கடன் பெறும் வசதி இருக்கிறது. இந்த திட்டத்தில்60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதேபோன்று அதிகபட்சம் பென்சன் தொகை ரூ 9,250. மாதாந்திரம் முறையில் இந்த பென்சன் தொகையானது வழங்கப்படும். அதுமட்டுமல்லால் காலாண்டு, அரையாண்டு, 1 வருட முறையிலும் நீங்கள் பென்சன் வாங்கலாம். அதாவது குறைந்தபட்சம் காலாண்டில் ரூ 3000, அரையாண்டில் ரூ.6,000 மற்றும் 1 ஆண்டில் ரூ 12,000 பென்சன் வாங்கலாம். அதேபோன்று அதிகபட்சமாக காலாண்டில் ரூ 27,750, அரையாண்டில் ரூ 55,500 மற்றும் 1 ஆண்டில் ரூ 1,11,000 பென்சன் கிடைக்கும்.