Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”… அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

சத்தீஸ்கர் சட்ட சபையில் இன்று ரூபாய் 1.04 லட்சம் கோடியில் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட்டில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் சமூகத்துறைக்கு 37% , பொருளாதாரத் துறைக்கு 40 % , பொதுசேவைத் துறைக்கு 23 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பூபேஷ் பாகல் பேசியபோது, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். அதன்பின் சத்தீஸ்கர் மாநில தொழில்முறை தேர்வு வாரியம் மற்றும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அனைத்து தொழில்முறை தேர்வுகளிலும், மாநிலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.
அதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, எம்.எல்.ஏ.க்கள்,  மாவட்ட மற்றும் ஜன்பத் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 2 கோடியில் இருந்து ரூபாய் 4 கோடியாக உயர்த்தப்படும் என்றும் இதற்காக ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |