Categories
Tech டெக்னாலஜி

ஜாலியோ ஜாலி!…. குறைந்த விலையில் ஜியோவின் ப்ரீப்பெய்ட் பிளான்…. இதோ சூப்பர் தகவல்….!!!!

ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் சூப்பரான நன்மைகளுடன் ப்ரீப்பெய்ட் பிளான்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மிக மலிவான விலையில் ஜியோ கொடுத்துள்ள சூப்பரான ப்ரீப்பெய்ட் பிளான் பற்றி நாம் இங்கே தெரிந்து கொள்வோம். ஜியோவில் பல்வேறு ப்ரீப்பெய்ட் திட்டங்கள் இருந்தாலும், தற்போது நாம் தெரிந்துக்கொள்ள இருக்கும் திட்டத்தின் விலையானது ரூபாய்.249 ஆகும். இதன் வேலிடிட்டி 23 நாட்கள் மட்டுமே என்றாலும் கூட இணையத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

மற்ற பிளான்களில் உள்ள அதே சலுகைகள் இதிலும் உள்ளது. அன்லிமிடெட் அழைப்புகள், நாளொன்றுக்கு 100 sms உள்ளிட்டவைகளை வாடிக்கையார்கள் மேற்கொள்ளலாம். மேலும் தினசரி 2gp டேட்டா இருக்கும். அதிவேக இணையம் வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சூப்பரான திட்டம் ஆகும். நாள் முழுவதும் இந்த 2gp டேட்டாவுக்குள் நீங்கள் திரைப்படங்கள், வீடியோக்களை பார்க்கலாம். ஒரு வேளை 2gp -ஐ நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் எனில், ஜியோ பூஸ்டரில் ரீச்சார்ஜ் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு செய்ய விருப்பமில்லை எனில் உங்களின் இணையவேகம் குறைந்து விடும். நெகடிவ் என கூறினால், இத்திட்டத்தின் வேலிடிட்டி மட்டுமே ஆகும்.

Categories

Tech |