தமிழகத்தில் 2013ம் ஆண்டு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய மாநில அரசுகள் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக சான்றிதழை பெற முடியும். அந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும். கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் நியமன தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டில் கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் தமிழக அரசு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிக்கை கூறப்பட்டிருந்தது .
மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் எதன் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும், நியமனத்தேர்வு தேர்வு குறித்த பாடங்கள் குறித்தும் விரைவில் அறிவிப்புகள் வெளியிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20.7. 2018 இன் படி போட்டி தேர்வு மூலம் தேர்வு பணி மேற்கொள்ளப்படும். இது குறித்த அறிக்கைகள் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் எட்டு ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருந்த 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.