இலங்கை வானொலி நிலையம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களுக்கான தன் சர்வதேச ஒளிபரப்பு சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. 1950கள் முதல் தமிழர்களின் இசை ரசனைக்கு சரியான விருந்தளித்து வந்தது இலங்கை வானொலி. உள்நாட்டு போர் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட சேவையை மீண்டும் தொடர கோரிக்கைகள் எழுந்ததால், கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் ஒளிபரப்பை மீண்டும் தொடங்கியுள்ளது. இதை 873 KHz அலைவரிசையில் கேட்கலாம். தமிழக நேயர்கள் நேரலையிலும் கலந்து கொள்ளலாம்.
Categories