தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வரத்தொடங்கியுள்ளன. இதனால் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 17ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.