Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!… தீபாவளியை முன்னிட்டு…. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழில் அதிபர்….!!!!

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயந்தி லால், சல்லானி ஜுவல்லரி எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஓணம், ஆயுதபூஜை, தீபாவளி என்று அடுத்தடுத்து பண்டிகைகளைத் தொடர்ந்து நகை வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி இருக்கிறார். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களில் 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கரவாகனமும் பரிசாக அளித்து இருக்கிறார்.

என் ஊழியர்களை ஊக்குவிக்கும் அடிப்படையிலும், அவர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த பரிசை வழங்குவதாக ஜெயந்தி லால் கூறினார். குறுகிய இடைவெளியில் பண்டிகை நாட்களில் கூடுதலாக உழைத்த தன் ஊழியர்களால் லாபம் கிடைத்ததாகவும், அனைவருடைய எல்லா ஏற்ற இறக்கங்களிலும் உடன் பயணித்தவர்களுக்காக நான் செய்யும் சிறு நன்றிக்கடன் எனவும் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பரிசாக தன் ஊழியர்களுக்கு ரூபாய்.1.2 கோடி பரிசு பொருள்களை ஜெயந்தி லால் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |