Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. பள்ளி மாணவர்களுக்கு….. மேலும் ஒருவாரம் கூடுதல் விடுமுறை?…..!!!!

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகின்றது. இதனால் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை, பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட காரணங்களால் ஜூன் நான்காம் வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |