Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. “மாணவிகளுக்கு ரூபாய் 1000″….. அமைச்சர் கொடுத்த உறுதி…..!!!!

மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லம் இருக்கக் கூடாது என்பது அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை. தனியாக இருப்பது முதியோருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் முதியோர் இல்லங்களை தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவியருக்கு உயர் கல்வி உதவி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |