Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. “ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை”….. குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி…..!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு., சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி துவக்க விழாவானது இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள சிவில் சப்ளைஸ் அலுவலகத்தின் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்ததாவது: “தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி கடத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார். அரிசி கடத்தல் வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டாக தற்போது அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் கடந்த ஆட்சியில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஒரு வருடத்தில் மட்டும் தற்போது 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரிசி கடத்தலை தடுப்பதற்கு அதிகாரிகள் தினந்தோறும் பணியாற்றி வருகின்றனர். மாநில எல்லைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களோடு இணைந்து அரிசி கடத்தலை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  ரேஷன் கடைகளில் தேவைப்படுபவர்கள் மட்டுமே அரசின் வாங்குகிறார்கள். கோதுமைக்கு பதில் அரிசி 22 ஆயிரம் டன் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அனைத்து குடோனுக்கும் கோடு சிஸ்டம் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் அரிசி எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பது அனைத்தும் தெரிய வந்துவிடும். பயோ மெட்ரிக் முறையை கொண்டு வந்ததிலிருந்து என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இதனால் கடத்தல் என்பது குறைந்து வருகின்றது. மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால்  1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |