அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.