ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கு உள்ளிட்ட முக்கியமானவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தகுதிக்கு குறைவான வேலையாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பது சரியா என்று கேள்வி எழுந்துள்ளது.
Categories