Categories
உலக செய்திகள்

ஜாலி தான்….!! கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து…. பிரபல நாட்டு பிரதமர் அறிவிப்பு….!!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்வதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  தெரிவித்துள்ளார்.  

உலகிலேயே சீனாவில் தான் முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன்  நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு தொடர்பாக செயல்முறைகள் இந்த வாரம் இறுதியில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் குளிர்காலம் முடிவடையும். இந்நிலையில் வைரஸின் பரவல் குறையும் போது பொது மக்களுக்கு இலவச கொரோனா அறிகுறி மற்றும் அறிகுறியற்ற பரிசோதனையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம். மேலும் கொரோனா வைரஸின் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான சட்ட தேவை வியாழக்கிழமை முதல் நீக்கப்படும். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து தனிப்பட்ட பொறுப்புக்கு நகரும். இந்நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாடுகளை சமாளிப்பதற்காக தற்காலிகமாக நடவடிக்கைகள் பராமரிக்கப்படும். மேலும் மக்கள் மற்றவர்களிடம் கரிசனையுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்த நாங்க முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வுடன் தங்களின் அன்புக்குரியவர்களை தொற்று ஏற்படுவதில் இருந்து காக்க நடைமுறை ஆலோசனைகளை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |