புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் வழியாகச் செல்லும் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி வலுவடைந்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜாவத் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்கும் என்பதால் அப்பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.