நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் நடைபெறும் உணவு வழங்கும் சேவைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. அங்கன்வாடிகள், முன்பருவ பள்ளிகள் கல்வி நிலையங்கள் ஆகவே கணக்கில் கொள்ளப்படும்.மதிய உணவு திட்டத்தை அரசு நிதி அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் நன்கொடை மூலம் செயல்படுத்தினால் அதற்கும் ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.