நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இது அமைந்தது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாதாரண மனிதர்கள் மீதான வரி சுமையை ஜிஎஸ்டி குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.