ஜிஎஸ்டி இழப்பீடு கட்டுவதற்கு மாநில அரசுகளுக்கு இரண்டாம்கட்ட இழப்பீடு தொகையாக ஆறாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதிலும் ஒரே வரியான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தியதால் மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பீட்டை சந்தித்துள்ளது. அதனை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்கி கொண்டிருக்கிறது. இருந்தாலும் மாநில அரசுகளுக்கு ஒதுக்க வேண்டிய இழப்பீடு நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தள்ளி வருவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிதியின் முதல் தொகுப்பாக 6 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த 23ஆம் தேதி 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்பிறகு ஜிஎஸ்டி இலைபிட நிதியின் இரண்டாவது தொகுப்பை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது. அவ்வகையில் மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாயை 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.