நாடு முழுவதும் இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாகையில் அமைய உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு, அடிக்கல் நாட்டினார். அதனுடன், துாத்துக்குடி – ராமநாதபுரம் குழாய் வழித்தடத்தையும், மணலியில், கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையையும் துவக்கி வைத்தார். இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில், எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் மூலம் தென் இந்தியாவில் பல்வேறு பகுதிகள் பயன்பெறும். மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின்உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரதேவை குறைக்கப்பட்டு வருகிறது. சூரிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கின்றன. முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
மேலும் சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்திக்காகவும், எரிசக்திக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் அதற்காக உழைப்பது நமது அனைவரின் கடமை. கடந்த 2019-2020ம் ஆண்டில், உள்நாட்டின் தேவைக்காக இந்தியா 85 சதவீத எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை இறக்குமதி இந்திய செய்தது. இதற்காக யாரையும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஆனால், இதில் நாம் கவனம் செலுத்தி இருந்தால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
அதுமட்டுமின்றி விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவ எத்தனால் பயன்பாட்டை அதிகரிபது, சோலார் எரிசக்தியில் போன்ற வற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.