ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
மூலப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் “ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதம் குறைக்க வேண்டும். அப்போதுதான் விலைவாசி உயர்வு குறையும். ஊழியர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். விலைஉயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும். குடும்பங்களை பாதிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னலை சந்தித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.