குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு தனது வரியை உயர்த்துவதற்காக திட்டமிட்டு வருகிறது. ஜிஎஸ்டி-ன் குறைந்தபட்ச விகிதாசாரத்தை 8 விழுக்காடாக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையில் 5 %, 12%, 18 %, 28% என நான்கு விகிதாச்சாரம் இருக்கிறது. இதில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த பட்சமாக 5 % வரி விதிக்கப்படுகிறது. சொகுசு பொருட்களுக்கு அதிக வரி 18 % அல்லது 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜிஎஸ்டின் குறைந்தபட்ச விகிதாசார 5 விழுக்காட்டை 8 விழுக்காடாக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக அரசின் வருவாய் கணிசமாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி குறைந்தபட்ச விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் ஜிஎஸ்டி கவுன்சில் சமர்ப்பிக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் 8% ஆக உயர்த்த பட்டால் ஆண்டிற்கு1.5 இலட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விகிதம் வெறும் 6 % உயர்த்தப்பட்டாலே அரசுக்கு கூடுதலாக 50,000 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் உயர்ந்தால் பெரும்பாலும் சாமானிய மக்களே பாதிக்கப்படுவார்கள். இதனால் சாமானிய மக்களின் பட்ஜெட்டில் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.