2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 4-வது மாதமாக 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. 2022 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக காகிதமில்லா நிதி அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.