கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் வருடம் மதுரையை களமாக கொண்டு உருவாகிய திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் லட்சுமிமேனன் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்து இருந்தார். இப்படத்துக்காக கடந்த 2014ஆம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
பல பேரின் பாராட்டுக்களையும் நல்ல வரவேற்பையும் பெற்ற இத்திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன் இதை நினைவுகூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் 2ஆம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் இப்படம் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜிகர்தண்டா-2 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியாகிய இறைவி படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.