நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக பரவும் இந்த வைரஸ் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கேரளா அண்டை மாநிலமான தமிழகத்திலும் வைரஸ் பரவாமல் இருப்பதற்காக கேரள தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்டா, டெல்டா பிளஸ் என்று புது வகையான வைரஸ்கள் உருவாகுகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை இருக்கிறது. எனவே கேரளா-தமிழகம் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.