Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம்…. இயக்குனர் அதிரடி உத்தரவு…!!!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார்.

புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். சில காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோக தன்மை தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அலுவல்முறை விதிப்படி 1976 இன் படி மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் போன்றவற்றில் இந்தி, ஆங்கில மொழி மட்டுமே இருக்க வேண்டும். மேலும் பாராளுமன்ற குழு வழங்கப்பட்ட உறுதி எண் 7ன் படி அலுவல் மொழியாக இவை இருக்க வேண்டும் எனவும் ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றின் தலைப்புகள் பணிகள் போன்றவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

மேலும் வரும் காலத்தில் பதிவேடுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் அனைத்தும் முடிந்த வரை ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்கள், பிரிவு பொறுப்பாளர், ஊழியர்கள் அனைவரும் இந்த விதியை நிச்சயமாக பின்பற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அலுவல் மொழி தொடர்பாக பாராளுமன்ற குழுவிற்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறைகள் அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலமாக இது கண்காணிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக உதவி தேவைப்பட்டால் இந்தி செல்லை அணுகி கொள்ளலாம் என ராஜேஷ் அகர்வால் உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜிப்மரில் பல மாநிலங்களில் உள்ளவர்களும்  பணிபுரிந்து  வருகிறார்கள். மருத்துவக் கல்லூரியிலும் நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த பலர் இருக்கின்றனர். அதேபோல சிகிச்சைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக  பதிவேடுகள், சேவை புத்தகங்கள் ஆகியவற்றில் இந்தி மட்டுமே எதிர் காலத்தில் இடம்பெறுவது நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Categories

Tech |