ஜிம்பாவேவில் உள்ள ஹரராவில் இந்திய அணி 3 தொடர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் முதல் சுற்று வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு துணை கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து ஒரு நாள் போட்டியில் விராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டரில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் விளையாடிய போது வாஷிங்டன் சுந்தருக்கு தோளில் அடிபட்டது. இதனால் சுந்தர் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.