இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேவில் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியினர் வெற்றி பெற்றனர். இந்த சுற்றில் இந்திய வீரர் சுப்மன் கில் (22) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று சுப்மன் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் 2 தொடர்களில் ஆட்டநாயகன் விருதை பெற்ற இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் பெற்றுள்ளார். இந்நிலையில் ஜிம்பாவே வீரர் ப்ராட் எவன்ஸ் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார்.
இளம் வயதில் தனக்குள் மிகப்பெரிய திறமைகளை சுப்மன் வைத்திருப்பதாக எவன்ஸ் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் மற்றும் 28 ரன்கள் எடுத்திருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியின் போது எவன்ஸ் தான் சுப்மனின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறி அவருடைய ஜெர்சியை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு எவன்ஸ் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் சுப்மனிடம் அவருடைய ஜெர்சியை கேட்டதாகவும் அதற்கு சுப்மனும் சம்மதித்ததாகவும் கூறினார். மேலும் 2 இளம் வீரர்கள் ஜெர்சியை மாற்றிக் கொண்டதை பார்த்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.