59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான பிரபல காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ட்ரெட்மில்லில் சரிந்து விழுந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். உடல்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், நிறைய அழுத்தம் கொடுத்து, உடல்பயிற்சி செய்வதால் அதுவே அவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.