Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பிரியா பவானி சங்கர்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர் . இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CUG_-YkJrlS/

நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |