வோடபோன் ஐடியாவானது எப்போதும் கம்மியான விலை திட்டங்களில் அதிகமான நன்மைகளை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. இது அதிகமான டேட்டா மற்றும் பல்வேறு OTT தளங்களுக்கான சலுகையை அளிக்கிறது. தற்போது நிறுவனம் 2 பிக் பேங் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவை ஒரு வருடத்துக்கு செல்லுபடி ஆகும். அதன் விலையானது ரூபாய்.2,999 மற்றும் ரூ.2,899 ஆகும். இவற்றில் அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு உட்பட பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
அதேபோல் வோடபோன் ஐடியாவானது ஓராண்டு திட்டங்களை பல கொண்டு உள்ளது. இப்போது இப்பட்டியலில் மேலும் 2 திட்டங்கள் சேர்ந்துள்ளது. வோடபோன் ஐடியாவின் ரூபாய்.2999 திட்டத்தில் 850GP டேட்டா கிடைக்கிறது. இத்திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இவை தினசரி டேட்டா வரம்பு திட்டம் இன்றி வருகிறது. திட்டத்தில் 4G டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர்த்து அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 SMS தினசரி கிடைக்கும்.
பின் வோடபோன் ஐடியாவின் ரூ.2899 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது தவிர்த்து அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 SMS தினமும் கிடைக்கும். இது வார இறுதிதரவு டேட்டா ரோல் ஓவர் திட்டம் ஆகும். இந்த 2 திட்டங்களைத் தவிர்த்து 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூபாய்.3,099 திட்டத்தை வோடபோன் ஐடியா கொண்டுள்ளது. இத்திட்டத்தில் நாளொன்றுக்கு 2GP டேட்டா கிடைக்கும். இது தவிர்த்து வரம்பற்ற அழைப்பு வசதியும் இருக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு Disney + Hotstar மொபைல் சந்தாவும் கிடைக்கும்.