இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ஜியோ சிம் கார்டுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் முண்டியடித்து கொண்டு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ 19 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று இருந்தாலும் இந்திய அளவில் ஜியோ தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதே காலகட்டத்தில் வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.