Categories
தேசிய செய்திகள்

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு இனி கிடையாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஜியோ நிறுவனம் தற்போது வரை இருந்த ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக உரையாடி கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஜியோ சிம் கார்டு தான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டுக்கு வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளனர்.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.99, ரூ.153, ரூ.297 மற்றும் ரூ.594 ஆகிய நான்கு ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. அதில் 153 ரூபாய் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதில் 99 ரூபாய், 297 ரூபாய் மற்றும் 594 ரூபாய் திட்டங்களில் தினமும், 0.5 ஜிபி டேட்டா 28, 84, 168 ஆகிய நாட்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டங்களை தான் தற்போது ஜியோ நிறுவனம் நீக்கியுள்ளது . இந்த திடீர் அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |