Categories
தேசிய செய்திகள்

ஜியோ பயனர்கள் கவனத்திற்கு…. ரூ.200-க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்…. இதோ முழு விபரம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய நாள்முதல் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து அனைத்து வேலைகளையும் ஆன்லைன் வாயிலாக செய்து வருவதால் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து வேலைகளும் வீட்டில் இருந்தே செய்யப்படுகிறது. அவ்வாறு வீட்டில் இருந்து பணிபுரிவோர் நாளொன்றுக்கு அதிகளவு டேட்டா தேவைப்படுகிறது. இந்நிலையில் பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ஜியோவில் வாடிக்கையாளருக்கு அதிக டேட்டா கிடைக்கும்படியான போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் தன் பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25 சதவீதம் வரை அதிகரித்தது. இதன் காரணமாக பயனர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு உள்ளாகினர். எனினும் அவ்வப்போது மலிவுவிலை ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. அதன்பின் ஜியோபோன் பயனாளர்களுக்கான குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையில் ரூபாய் 75 ரீசார்ஜ் திட்டத்தில் நாளொன்றுக்கு 100எம்பி டேட்டாவுடன் 200MB கூடுதல் டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மைகளை 23 தினங்களுக்கு அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ரூபாய் 91 ரீசார்ஜ் திட்டத்தில் நாளொன்றுக்கு 100MB டேட்டா, அன்லிமிட்டட் காலிங், ஜியோபயன்பாடுகளின் இலவச சந்தா, 50 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதனை தொடர்ந்து ரூபாய் 125 திட்டத்தில் நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் , 300 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்குரிய இலவச சந்தா போன்றவைகளை 23 தினங்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ரூபாய் 152 திட்டத்தில் நாளொன்றுக்கு 0.5 ஜிபிடேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ,100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தா போன்றவை வழங்குகிறது.

Categories

Tech |