ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா -இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் ஜியோடிவி செயலியை பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும். இதற்கு தனிப்பட்ட கட்டணம், சந்தா தேவையில்லை எனவும் கூறியுள்ளது.