Categories
டெக்னாலஜி

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் இலவச சலுகை திட்டம்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மாதம் 300 நிமிடம் (நாளொன்றுக்கு 10 நிமிடம்) இலவச அழைப்புகளை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய பேரிடர் காலத்தில் வெளியில் சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்கள் இந்த சலுகை திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சலுகை வருடாந்திர திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு பொருந்தாது.

Categories

Tech |