ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அதிரடி சலுகைகளை வழங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதிக அளவில் ஜியோ சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.1, 499 திட்டம் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் 1800 ரூபாய் பாது காப்பு வைப்புத் தொகையை முன்னரே செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. பயனர்கள் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்திய பிறகு வைப்புத் தொகை திருப்பித் தரப்படும் என கூறியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.