இந்தியாவின் பெரும்பாலானோர் ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் சார்பாக புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் யாருக்கும் தனிநபர் விவரங்களை பகிர வேண்டாம் என்றும் தெரியாத நபர்களிடமிருந்து போன் அல்லது எஸ் எம் எஸ் வந்தால் அதில் தனிநபர் விவரங்களை வழங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் தனிநபர் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் தேவையில்லாத மொபைல் ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் எனவும் ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையில்லாத செயலிகளை மொபைலில் டவுன்லோட் செய்தால் அதன் மூலம் வாடிக்கையாளரின் தனிநபர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் திருடப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் தற்போது ஆன்லைன் பண மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது போன்ற வலைகளில் சிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே மொபைல் ஆப் டவுன்லோட் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.