ஹிஜாப் அணிவதற்கு சர்ச்சை எழுந்து வந்த நிலையில் தற்போது அதற்கு கர்நாடாக ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்துகொள்ளும் ஒருவகை துணியாகும். இந்த உடையை அணிவதற்கு கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியர்களுக்கு கல்லூரிக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே இதற்காக மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குகள் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைகுட்படுத்தப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தனி அறையில் அமர வைக்கப்படுவார்கள் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.